இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு புதிய காணி.

0
193

பதுளை மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு, மாணவர்களின் நலன் கருதி புதிய காணிகளை பெற்றுக்கொடுத்த செந்தில் தொண்டமான்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரிண் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு காணி ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

1.கிளனன்பின் தியனாகல தமிழ் வித்தியாலயம்
2.கனவரெல்ல தமிழ் வித்தியாலயம்
3.மீறியபத்த தமிழ் வித்தியாலயம்
4.லியங்காவல தமிழ் வித்தியாலயம்
5.மவுசாகல தமிழ் வித்தியாலயம்
6.தம்பேத்தன தமிழ் வித்தியாலயம்
7.மாக்கந்த தமிழ் வித்தியாலயம்
8.ஸ்பிரிங்வெலி மேமலை தமிழ் வித்தியாலயம்

ஆகிய பாடசாலைகளை கட்டுவதற்கான மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிளனன்பின் தியனகல தமிழ் வித்தியாலயம் ,ஸ்ப்ரிங்வெலி மேமலை தமிழ் வித்தியாலயம்,மாக்கந்த தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு இதற்கான உத்தியோகபூர்வ கடிதங்களும் வழங்கப்பட்ட்டுள்ளன.

லியங்காவல பாடசாலையானது அங்குள்ள தொழிற்சாலையை மாற்றியமைத்து மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ஏற்ற வகையில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், கனவரெல்ல, மீரியபத்த ஆகிய பாடசாலைக்கு உத்தியோக பூர்வ கடிதம் வழங்கப்படவும் உள்ளது.

மேலும் இந்த 6 பாடசாலைகளுக்கு 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிய கட்டிடங்களும் அமைக்கப்படவுள்ளன.

இதேவேளை, மேற்படி அனைத்து பாடசாலைகளிலும் 500 க்கும் அதிகளவான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இயற்கை அனர்த்தம் காரணமாக இந்த பாடசாலைகளின் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட கூடிய நிலை காணப்பட்டதால் மாணவர்களுக்கு பாதுகாப்பு அச்ச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் கல்வியை தொடர முடியாத நிலை காணப்பட்டது.

இந்த விடயம் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை தெடர்ந்து மாணவர்களின் நலன் கருதி அவர் உடனடியாக மேற்படி பாடசாலைகளுக்கு புதிய கட்டங்களை அமைப்பதற்கான காணிகள் விரைவாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here