முந்தல் – அகுனாவில பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணும் அவரது கணவரும் இணைந்தே சிசுவை புதைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். புத்தளம் – முந்தல் பகுதியில் பிறந்து 21 நாட்களே ஆன சிசுவொன்று இரகசியமாக புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முந்தல் பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையவே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், முந்தல் – அகுனாவில பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணும் அவரது கணவரும் இணைந்தே சிசுவை புதைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆகவே, குறித்த முறைப்பாடு தொடர்பாக நீதிமன்றில் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
எனவே, பொலிஸார் முன்வைத்த விடயங்களுக்கு அமைய, புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.