சுமார் இரண்டாயிரம் பயணிகளுடன் பாரிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.அதி சொகுசு கப்பல்களில் ஒன்றான மென் சீப் 5 என்னும் கப்பலே இன்று (29.11.2022) கொழும்பை வந்தடைந்துள்ளது.கடந்த 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பல் 295 மீட்டர் நீளமுடையது என்பதுடன் 2500 பயணிகளை காவிச் செல்லக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் இன்றிரவு ஹம்பாந்தோட்டை துறைமுகம் நோக்கி செல்லவுள்ள நிலையில் பின்னர் அங்கிருந்து தனது பயணத்தை மீளவும் தொடரும் என தெரிவிக்கப்படுகின்றது.
முதல் தடவையாக இந்த கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.