இரண்டு குழந்தைகளை விற்பனை செய்த இளம் தாய் கைது

0
220

இரண்டு குழந்தைகளை தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த இளம் தாய் மற்றும் அவ்விரு சிசுக்களையும் விலைக்கு வாங்கிய இரண்டு பெண்களை இன்று (07) ராகம காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேவேளை பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவரும், இரண்டு சிசுக்களையும் வாங்கிய இரண்டு பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களில் இரட்டை சிசுக்களில் ஒன்றை வாங்கிய பெண்ணொருவர் ராகம பிரதேசத்திலும் மற்றைய சிசுவை விலைக்கு வாங்கிய பெண், களனி பிரதேசத்திலும் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினரின் விசாரணைகளில் குறித்த தாய் ராகம பிரதேசத்தில் வீட்டு வேலை செய்த வந்ததாகவும், கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here