இரண்டு குழந்தையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை.

0
199

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் உள்ள 53 வயது உடைய இரண்டு குழந்தைகளின் தந்தை நேற்று அதிகாலை வேளையில் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் மனைவி வெளிநாட்டில் பணிபுரியும் வேலையில் பிள்ளைகள் தலைநகரில் பணியில் உள்ளனர் எனவும் இவர் குடும்ப தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ்காரர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருவதுடன் உடலை பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

 

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here