காய்ச்சலைக் கட்டுப்படுத்த பரசிட்டமால் மருந்தை உட்கொள்ளலாம் என்றாலும் டிஸ்பிரின், அஸ்பிரின் அல்லது இதுபோன்ற மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு எடுப்பதே மிக முக்கியமான விடயம், காச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்கள் பாடசாலைக்கோ அல்லது வேலைக்கோ செல்லாமல் சில நாட்கள் வீட்டில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
காய்ச்சலைக் கட்டுப்படுத்த பரசிட்டமால் மருந்தை உட்கொள்ளலாம் என்றாலும் டிஸ்பிரின், அஸ்பிரின் அல்லது இதுபோன்ற மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் டிஸ்பிரின் அல்லது அஸ்பிரின் போன்ற மருந்துகளை உட்கொண்டால் அது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.