இரத்தினபுரி தமிழ் கல்வி வளர்ச்சியின் பொற்காலம் இதுவே!

0
213

இரத்தினபுரி மாவட்ட தமிழ் கல்வி வளர்ச்சி குறித்து சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.எச். டி.சிசிர அவர்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் சப்ரகமுவ மாகாண சபையின் கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரி தமிழ் தேசிய கல்லூரியின் அபிவிருத்தி விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இதுவரை குறித்த வேலைத்திட்டத்தின் அடைவு மட்டம் குறித்து மாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

குறிப்பாக தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் குறித்த பாடசாலைக்கு வழங்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப் படுத்தப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, இரத்தினபுரி மாவட்ட தமிழ் கல்வி வளர்ச்சிக்கு கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது எனவும், கல்லூரிக்கான காணியினை பெற்றுக்கொடுக்க பிரதமரின் இணைப்புச் செயலாளர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களின் பங்களிப்பு வரவேற்கத்தக்கது எனவும் மாகாண கல்வி செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரத்தினபுரி தமிழ் தேசிய கல்லூரியின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மாகாண கல்வி அமைச்சு பூரண ஒத்துழைப்பை வழங்கும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் மாகாண திட்டமிடல் பணிப்பாளர் நெவில் குமாரகே அவர்கள், இரத்தினபுரி தமிழ் தேசிய கல்லூரியின் அதிபர் இருளப்பன் ரவி அவர்கள் மற்றும் இளைஞர் அணியின் அமைப்பாளர் இராஜேந்திரன் பெருமாள் ஆகியோர் கலந்துகொண்ட அதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் 6 தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு கல்வி அதிகாரிகள் வழங்கிய பங்களிப்பு குறித்து ரூபன் பெருமாள் அவர்கள் மாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு நன்றி தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here