களு கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையால் இரத்தினபுரி மற்றும் மில்லகந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று அனர்த்த முகாமைத்துவ மையம் எதிர்வு கூறியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருவதனால் கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
		
