இரயில் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

0
108

இரயில்வே ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக இரயில்வே திணைக்களத்திற்கு கிடைக்கும் மாதாந்த வருமானம் போதுமானதாக இல்லை
இரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 19 ஆயிரம் இரயில்வே ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக இரயில்வே திணைக்களத்திற்கு கிடைக்கும் மாதாந்த வருமானம் போதுமானதாக இல்லை எனவும், அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக வெளியான திறைசேரி அறிவிப்பை தொடர்ந்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர், அனைத்து இரயில் கட்டணங்களை அதிகரிப்பது மற்றும் பயண பற்றுச்சீட்டு வழங்குவது குறித்தும் போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

அனைத்து இரயில் கட்டணங்களையும் தற்போதுள்ள குறைந்தபட்ச கட்டணமான 20 ரூபாவில் இருந்து பேருந்து கட்டணத்திற்கு இணையாக அதிகரிக்க அமைச்சு அதிகாரிகள் முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பிரதான இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இரயில்வே துறை முதலீட்டில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்திய பெட்டிகள் மற்றும் இன்ஜின்களை இறக்குமதி செல்வதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here