மாஸ்டர் படத்தை அடுத்து கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் வந்து நடத்த இருந்தார்கள். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக படப்பிடிப்பை தள்ளி வைத்திருக்கிறார்கள்.
எப்போதும், தான் நடித்துக் கொண்டிருக்கும் படம் முடிந்த பிறகுதான் அடுத்த படத்தை பற்றி யோசிப்பார் விஜய். தற்போது தளபதி 65 பட வேலையே இன்னும் முடியாத நிலையில் அடுத்ததாக தளபதி 66 படத்தை தயாரிக்கப் போவது தில் ராஜு, அதை இயக்கப்போவது தோழா, மகரிஷி படங்களை இயக்கிய வம்சி என்னும் இயக்குனர் என்று தகவல்கள் பரவியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் குறித்து அவ்வபோது வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது நண்பர்களுடன் காரில் கும்மாளம் போடும் சஞ்சையின் வீடியோ சமுகவளைதலங்களில் வெளியாகியுள்ளது. மேலும் ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது,