இராகலை -டியநிலை மல்லியப்பு தோட்டத்தில் மின்சாரம் தாக்கி தோட்ட தொழிலாளி ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான சதாசிவம் சத்தியமூர்த்தி (வயது34) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் இராகலை பொலிசார் தெரிவித்தனர்.
மரம் ஒன்றின் கிளைகளை வெட்டும் பணியில் இத் தொழிலாளி ஈடுப்பட்ட நிலையில், வெட்டப்பட்ட மரக்கிளை மின் கம்பியின் மேல் விழுந்ததால்,மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
தற்போது சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
டி சந்ரு