இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்கரனோயா தோட்டத்தில் 16 வயதுடைய சிறுவன் ஒருவரை இராகலை பொலிசார் (17) இரவு கைது செய்துள்ளனர்.
அல்கரனோயா தோட்டத்தில் வசிக்கும் இச் சிறுவன் தனது பக்கத்து வீட்டில் உள்ள ஐந்து வயதுடைய சிறுமியின் அந்தரங்க உறுப்பில் கைவிட்டு சேட்டையிட்டுள்ளார்.
இதனால் அச் சிறுமியின் அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் பெற்றோர் சிறுமியை இராகலை பொலிசாரின் உதவியுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சிறுவன் மீது பெற்றோர் (17) இரவு முறையிட்டுள்ளனர்.
இவர்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சிறுவனிடம் மேலதிக விசாரணைகளை செய்து வரும் பொலிசார் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறுவனை வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
டி.சந்ரு