இராஜாங்க அமைச்சரிடமிருந்து அரச தொலைக்காட்சிக்கு பொல்லு

0
162

இராஜாங்க அமைச்சர் ஒருவர் பெரஹரவின் நேரடி ஒளிபரப்புக்காக தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு ஒன்பது இலட்சம் ரூபாவை செலுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1887 ஆம் நவகமு வரலாற்று புராண ஸ்ரீ சத்பத்தினி மகா ஆலயத்தின் ரந்தோலி பெரஹராவை தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புவதற்காக செலவிடப்பட்ட தொகையை செலுத்த தவறியதாக அறியமுடிகிறது.

இராஜாங்க அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் நவகமுவ பெரஹராவை நேரடியாக ஒளிபரப்பியிருந்தது.

தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் பிரதம கணக்காளர் இந்த நிலுவைத் தொகை தொடர்பில் இராஜாங்க அமைச்சரிடம் பலமுறை நினைவூட்டியும் இதுவரை தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு அவர் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த ஊர்வலம் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் திகதி தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here