இராஜினாமா செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள

0
59

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தலதா அத்துகோரள , எம்.பி. பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தாலும் தனது அரசியல் பயணம் தொடரும் என அவர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

“ ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தியமை தொடர்பில் எனக்கு இன்றளவிலும் கவலை உள்ளது. நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பெற்றிருந்தாலும் அந்த குற்றம் மனதை வதைத்துக்கொண்டிருக்கின்றது.” – எனவும் தலதா குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here