இருநூறு மில்லியன் ரூபா செலவில் ஹட்டன் போடைஸ் வீதி காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்.

0
204

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் அரசாங்த்தின் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்படாது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஹட்டன் போடைஸ் ஊடாக டயகம வரை செல்லும் பிரதான பாதை சுமார் 200 மில்லியன் ரூபா செலவில் காபட் இடும் பணிகள் இன்று (28) நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மன்ராசி தொடக்கம் டிக்கோயா வரை உள்ள குறித்த வீதி கடந்த பல வருட காலமாக மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன. வீதி ஒடுக்கமாக காணப்பட்டதன் காரணமாக பல விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் போடைஸ் 50 ஏக்கர் பகுதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்ததனால் இந்த வீதி தற்காலிக நோர்வூட் பிரதேச சபைத்தலைவர் மற்றும் அக்கரபத்தனை பிரதேச சபைகள் இணைந்து மூடப்பட்டன.
குறித்த வீதியினை அகலப்படுத்தி அபிவிருத்தி செய்து தருமாறு போராட்டங்களும் இடம்பெற்றன.

இந் நிலையில் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதனை தொடர்ந்து குறித்த வீதி நிமல் லன்சா அவர்களினால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து குறித்த வீதி மன்ராசி பகுதியிலிருந்தும் போடைஸ் பகுதியிலிருந்தும் அகலப்டுத்தப்பட்டு காபட் இடும் பணிகள் நோர்வூட் விதி அபிவிருத்தி அதிகார சபையினூடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக டிக்கோயா தொடக்கம் போடைஸ் சந்தி வரை சுமார் ஆறு கிலோமீற்றர் தூரம் காபட் இடப்படவுள்ளன.குறித்த வீதி கட்டடம் கட்டமாக 19 |கிலோ மீற்றர் காபட் இடவுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே. ரவி தெரிவித்தார். வீதி காபட் இடும் பணியினை ஆரம்பித்து அவர் உரையாற்றுகையில் நோர்வூட் பிரதேசத்திற்குற்பட்ட போடைஸ் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஸ் விபத்தொன்று இடம்பெற்றது.

அதில் பாடசாலை மாணவர்களும உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். அந்தப்பாதைகள் பஸ் ஓடக்கூடிய நிலையில் காணப்படவில்லை அகலம் குறைவாகவே காணப்பட்டது. நோர்வூட் பிரதேச தலைவர் என்ற வகையில் நானும் உப தலைவர் அவர்கள் உட்பட உறுப்பினர்கள் சென்று அந்த பாதையினைப் பற்றி ஆரோய்ந்தோம்.

அந்தப்பாதையானது உண்மையில் பஸ் போக்குவரத்தில் ஈடுபடும் அளவில் இல்லை அதனால் ஆளுனருக்கு தெரிவித்து அந்தப்பாதையில் பஸ் போக்குவரத்தை இடைநிறுத்துமாறு அறிவித்திருந்தோம். அதன் பின் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் இந்த பாதை போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை பல விபத்துக்கள் இடம்பெறுகின்றன எனவே பாதையை அகலப்படுத்தி அபிவிருத்தி செய்து பஸ்போக்குவரத்தில் ஈடுபட காபட் இட்டுத்தருமாறு கேட்டுக்கொண்டோம்.

அந்த அடிப்படையில் அந்த பேச்சுவார்த்தைக்கமைய ஜீவன் தொண்டமான் அவர்கள் நிதல் ஹான்சா அவர்களிடம் பாதையை இட்டுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பாதையினை காபட் இடுவதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
அந்த வகையில் 19 கிலோமீற்றர் தூரமுள்ள இந்த பாதை அகலப்படுத்தும் பணிகள் நிறைவு செய்யப்பட்டு 200 மில்லியன் ரூபா செலவில் காபட் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட எல்லா முக்கியமான பகுதிகளிலும் உள்ள பாதைகள் காபட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here