இருமுறை தோல்வி கண்ட வரவுசெலவு திட்டம் ஆளுநரின் தலையீட்டால் நிறைவேற்றம்.

0
343

இரண்டு முறை தோல்விகண்ட 2022 ஆண்டுக்கான தலவாக்கலை லிந்துலை நகரசபையின் வரவு செலவு திட்டம் ஆளுநரின் தலையீட்டால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் லெச்சுமணன் பாரதிதாசம் தெரிவித்தார்.தலவாக்கலை லிந்துலை நகரசபையின் இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

தலவாக்கலை லிந்துலை நகர சபையின் 2022 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த சபை அமர்வுகளின் போது இரண்டு முறை தோல்வி கண்டது மக்களின் சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு அமைய ஆளுநரின் அதிகாரத்திற்கமைய உள்ளுராட்சி 178 இலக்க சட்டத்திற்கமைய 2261ஃ3 இலக்கத்தினை கொண்ட அதி விசேட வர்த்தமானியின் 2022.01.03 திகதி வெளியிடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த வரவு செலவு திட்டம் தொடர்பாக ஆளுநர் மக்கள் சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சபை உறுப்பினர்களிடம் கலந்துரையாடி மத்திய மாகாண ஆளுநரினாலும் உள்ளுராட்சி ஆணையாளரினாலும் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த வரவு செலவு திட்டத்தினை நேற்று (07) திகதி நடைபெற்ற சபை அமர்வின் போது முன்வைக்கப்பட்டு சபை அங்கத்தவர்களினால் அங்கிகாரமும் நேற்று பெறப்பட்டுள்ளது தலவாக்கலை லிந்துலை நகர சபையில் தற்போது 10 உறுப்பினர்கள் உள்ளதாகவும் இதில் நான்;கு உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்து கொண்டதாகவும்,அவர்கள் அங்கிகாரம் பெறுவதற்கு குறித்த எண்ணிக்கை போதுமானதாக உள்ளதாகவும் எனவே எதிர்காலத்தில் மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்க முடியும் என்றும் இந்த சபை அமர்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக மூன்று உறுப்பினர்களும் இலங்கை பொது ஜன பெறமுன கட்சியில் ஒரு உறுப்பினரும் கலந்து கொண்டதாகவும்,ஐக்கிய தேசிய கட்சியில் 02 உறுப்பினர்களும்,இலங்கை பொது ஜன பெரமுன கட்சியில் இரண்டு உறுப்பினர்களும்,சுயேட்சைகுழுவில் இரண்டு உறுப்பினர்களும் இதன் போது கலந்து கொள்ளவில்லை எனவும் இந்த வரவு செலவு திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உதவிய ஆளுநர்,உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் அதன் போது மேலும் தெரிவித்தார்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here