இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு சிறுவன் பலி; சிறுமி கைது

0
215

விளையாடிக் கொண்டிருந்த போது சிறுமியால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு சிறுவன் பலி; சிறுமி கைது
விளையாடிக் கொண்டிருந்த போது சிறுமியால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களான இரண்டு சிறார்களும் விளையாடிக் கொண்டிந்த சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த சிறுவன் நீர்கொழும்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (07) உயிரிழந்துள்ளார்.

12 வயதான சிறுமி ஒருவரால் 10 வயதான சிறுவனின் நெற்றிப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட 12 வயதான சிறுமியைக் கைது செய்து நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் சிறுவர் நிலையமொன்றில் தடுத்து வைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய் வெளிநாட்டில் உள்ளார் எனவும், அவரது தந்தை வேறு திருமணம் முடித்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here