டிக்கோயா புளியாவத்தை நகரில் இருளில் இரும்புக்கடையொன்று திடீரென தீப்பற்றிக்கொண்டதில் அக்கடைக்கு மேல் மாடியில் இருந்து குடியிருப்பு பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளன.இதனால் அந்த குடியிருப்பு பகுதியிலிருந்த அனைத்து உடைமைகளும் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக உரிமையாளர் தெரிவித்தார்.
கடை தீப்பற்றிக்கொண்ட போது வீட்டில் உள்ளவர்கள் கடையின் மேல்மாடியில் இருந்துள்ள போதிலும் தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித காயமும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா புளியாவத்தை நகரில் அமைந்துள்ள இரும்பு பொருட்களில் சேகரிக்கும் கடையொன்றில் நேற்று (01) இரவு மின்துண்டிப்பின் போது சுமார் 8.30 மணியளவில் திடீரென தீ ஏற்பட்டுள்ளது.
இருள் நிறைந்து காணப்பட்டதனாலும்; தண்ணீரினை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாது போனதன் காரணமாகவும்; தீயினை உடனடியாக அனைக்க முடியாது போனதாகவும் பின்னர் கடையிலிருந்து கூச்சலிட்டதனால் பிரதேவாசிகள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பாரிய பிரயாத்தணத்திற்கு பின் தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மின்சாரம் மற்றும் நீர் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் இருந்திருந்தால் பாரிய அளவு சேதம் ஏற்படாது தடுத்திருக்கலாம் என தீயணைப்பில் ஈடுபட்டிருந்து இளைஞர் ஒருவர் தெரிவித்தார். குறித்த தீ வீட்டில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கின் திரியினை எலி யொன்று எடுத்து சென்று போடப்பட்டதனால் குறித்த தீ ஏற்பட்டிருக்கலாம் என வீட்டார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
குறித்த தீயினை கட்டுப்படுத்துவதற்கு ஹட்டன் தீயனைப்பு படை பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த பின் தீயனைப்பு படை பிரிவு குறித்த இடத்திற்கு வருகை தந்ததாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். தீப்பரவல் இருப்பு கடைக்கு மேற்பகுதியில் இருந்த குடியிருப்பு பகுதியிலிருந்து பரவியிருப்பதாகவும் இதனால் குடியிருப்பு பகுதியிலிருந்து தளபாடங்கள், உடுதுனிகள், அத்தியவசிய ஆவனங்கள் உட்பட அனைத்து தீக்கிரையாகியுள்ளன.
இதனால் பல லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலைவாஞ்ஞன்