இப்பாகமுவ வீர கேணல் நியோமால் பலீபான கல்லூரி மற்றும் குளியாப்பிட்டி தாவல்ல தம்மாலோக மகா வித்தியாலய மாணவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இன்று (01) கிடைத்தது.
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற மக்கள் தொடர்பாடல் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக இந்த நிகழ்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கே.என்.எம்.குமாரசிங்க, நிறைவேற்று அதிகாரத்தின் பணிகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் இங்கு உரையாற்றியதுடன், இந்த நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்த வகையில் சுற்றாடலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் அடையாள ரீதியிலான பரிசாக குறித்த பாடசாலைகளுக்கு பெறுமதியான மரக் கன்றுகளையும் வழங்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படைகளின் ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, இப்பாகமுவ வீர கேணல் நியோமால் பலீபான கல்லூரியின் அதிபர் எச்.எம்.ஏ.டபிள்யூ.பீ.தித்தவெல்ல, குளியாப்பிட்டி தாவல்ல தம்மாலோக மகா வித்தியாலய அதிபர் டபிள்யூ.பீ.ஐ.லக்மால், ஆகியோருடன் ஆசிரியர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.