மொகமட் சமியின் துல்லியமான பந்துவீச்சால் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. உலககிண்ண போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இன்றையதினம் வான்கடே மைதானத்தில் இந்திய நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 04 விக்கெட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களை பெற்றது.
அவ்வணி சார்பாக கோலி 117, ஸ்ரேயாஸ் ஐயர் 105, சுப்பமன்கில் ஆட்டமிழக்காமல் 80,அணித்தலைவர் ரோகித் சர்மா 47 ஓட்டங்களை பெற்றனர்.
பதிலுக்கு 398 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய நியூஸிலாந்து அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 327 ஓட்டங்களை பெற்றது.இதனால் இந்திய அணி 70 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து அணி சார்பாக டேரில் மிட்செல் 134 ஓட்டங்களையும் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 69 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் மொகமட் ஷமி 07 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் 4 -வது முறையாக இந்தியா உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.