இறுதி ஒருநாள் தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா அணி..!

0
205

இந்திய அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

தொடரை தீர்மானிக்கும் விறுவிறுப்பன போட்டியாக இன்றைய போட்டி அமைந்திருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சகல ஆட்டமிழப்புகளையும் பறிகொடுத்து 269 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

270 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல ஆட்டமிழப்புகளையும் பறிகொடுத்து 248 ஓட்டங்களை பெற்று தோழ்வியடைந்தது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 54 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்ட்யா 40 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர். அவுஸ்திரேலிய அணி சார்பில் அடம் சம்பா அதிகபட்சமாக 4 ஆட்டமிழப்புகளை கைப்பற்றினர்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அவுஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here