இலங்கைக்கான முதலாவது பதக்கத்துடன் நாட்டை வந்தடைந்தது இலங்கை கிரிக்கெட் மகளிர் அணி

0
89

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை இதுவரை வென்ற ஒரே பதக்கமாக மகளிர் கிரிக்கெட் அணியின் இந்த வெள்ளிப் பதக்கம் உள்ளது.சீனாவின் ஹான்சோ நகரில் நடைபெற்று வரும் 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை அணி நேற்று கட்டுநாயக்க நாடு திரும்பியது.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி வரை விளையாடிய இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டி யில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது.

இதனை தொடர்ந்து இலங்கை அணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.இந்நிலையில் நாடு திரும்பிய இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அத்தபத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

‘இந்த வெற்றி தொடர்பில் எமக்கு மகிழ்ச்சியாக உள்ளது.இந்த ஆண்டு எமக்கு சிறந்த ஆண்டாக உள்ளது.

நாம் இங்கிலாந்தை வீழ்த்தி இருபதுக்கு இருபது தொடரில் வெற்றிபெற்றோம்.

பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளையும் தோற்கடித்தோம்.

உலகக் கிண்ணத்தை வெல்வதே எமது அடுத்த எதிர்பார்ப்பாகும்.

எமது பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு சிறப்பாக உள்ளது.

துடுப்பாட்டத்தையும் மேம்படுத்தி சரி செய்ய வேண்டும்.

அதன்மூலம் எமக்கு உலகக்கிண்ணத்தை வெல்ல முடியும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை இதுவரை வென்ற ஒரே பதக்கமாக மகளிர் கிரிக்கெட் அணியின் இந்த வெள்ளிப் பதக்கம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here