இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி விகிதத்தை அமெரிக்கா 20 வீதமாக குறைத்துள்ளது.
முன்னதாக இன்று (1) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 வீத பரஸ்பர வரி விகிதத்தை அமெரிக்கா அறிவித்திருந்தது.
இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பின்படி, இலங்கை உட்பட பல நாடுகளில் கட்டண விகிதங்கள் மேலும் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தெற்காசிய நாடுகளான பங்களாதேஷூக்கு 20 வீதமாகவும், பாகிஸ்தானுக்கு 19 வீதமாகவும் வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டண விகிதத்தை அமெரிக்கா மாற்றவில்லை, இதன்படி, இந்தியாவிற்கு 25 வீத வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலுக்கு விதிக்கப்பட்ட வரி விகிதம் 15 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சிரியா மீது 41 வீத வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது. லாவோஸ் மற்றும் மியான்மர் மீது தலா 40 வீத வரி விதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை அறிக்கை மேலும் கூறுகிறது.