முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான பொறுப்பு அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திடம் அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஒப்படைத்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
குறிப்பாக முட்டைகளுக்கான விலைமனு கோரல் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்தல் மற்றும் பொருத்தமான இறக்குமதியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் அடுத்த வாரத்திற்குள் நிறைவடையும் என்றும் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சந்தைக்குத் தேவையான முட்டைகளின் அளவை அரசாங்கம் தீர்மானிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அடுத்த வாரத்திற்குள் இலங்கைக்கு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அரச வர்த்தக பல்வேறு சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.
முட்டைகளை இறக்குமதி செய்த பின்னர், நுகர்வோர் 45 ரூபாவிற்கும் குறைவான விலையில் முட்டைகளை விற்பனை செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முட்டையின் விலை அதிகரிப்பினால் நுகர்வோர் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு முட்டையை இறக்குமதி செய்வது அவசியமானதென வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ கடந்த 2ஆம் திகதி கூடிய அமைச்சரவையில் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் அதற்கான அங்கீகாரம் கிடைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது