பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக பணிபுரிந்து வந்த நிலையில் பிரியந்த குமார என்ற இலங்கையர் கொலை செய்யப்பட்டுள்ளமை இலங்கை மக்களிடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்பவர்களையும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.இந்நிலையில் பாக்கிஸ்தானில் உயிரிழந்த இலங்கையருக்கு முழு பொறுப்பையும் பாக்கிஸ்தான் அரசு ஏற்றுக்கொள்வதோடு விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபச்செயலாளர் சச்சுதானந்தன் தன் கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கண்டனத்துக்குரியது என இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் தன் குடும்பத்தை காக்க பாக்கிஸ்தானுக்கு பணிக்கு சென்ற இலங்கையரை சில காட்டுமிராண்டிகள் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளமை மமாபெறும் தண்டனைக்குறிய குற்றமாகும்.இதற்கு முழுப்பொறுப்பும் பாக்கிஸ்தான் அரசையே சாரும். எனவே உயிரிழந்தவர் தொடர்பிலும் உயிழிப்புக்கு காரணமானவர்கள் தொடர்பிலும் பாக்கிஸ்தான் அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கும் நஸ்ட ஈட்டை வழங்க முன்வர வேண்டுமெனவும் சச்சுதானந்தன் தன் கண்டன அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்