இலங்கையர்களே அவதானம்..! நோய்க்கிருமிகளாக மாறியுள்ள உணவுகள்!

0
147

உள்ளுர் சந்தையில் இருந்து உணவுக்காக கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகள், பழங்கள், அரிசிகள், இறைச்சிகள் மற்றும் மீன்களில் பெரும்பாலானவை விஷம் மற்றும் இரசாயனங்கள் காரணமாக நோய்க்கிருமிகளாக மாறியுள்ளதாக வைத்தியர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலைமையால் உலகில் விஷ உணவுகளை உட்கொள்ளும் நாடுகளில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பலாப்பழத்தைப் பாதுகாக்கவும், மாம்பழங்களைப் பழுக்க வைக்கவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் பெரும்பாலான கடைகளில் கோழி பிரியாணி மற்றும் பிரைட் ரைஸ் என்பன மஞ்சள் நிறமாக மாற்றுவதற்கு அதிக அளவு மஞ்சள் சாயம் பயன்படுத்தப்படுகின்றது. இது ஆரோக்கியமற்ற நிலைமையை ஏற்படுத்துகின்றது.

மஞ்சளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் இந்த மஞ்சள் நிற சாயம், சோறு போன்றவற்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், அவற்றைச் சாப்பிட்டால் நோய்வாய்ப்படும் அபாயம் அதிகமாகவுள்ளது.

எனவே இதற்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய அமைப்பைத் தயாரிக்க வேண்டும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here