இலங்கையர்களை ஏற்றி சென்ற பேருந்தில் விபத்து ;இஸ்ரேலில் சம்பவம்

0
5

இஸ்ரேலில் விவசாய சேவையில் ஈடுபட்டிருந்த இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக எரிந்துள்ளது.

நேற்று (18) காலை இஸ்ரேலின் கிரியாத் மலாக்கி (Kiryat Malakhi) பகுதிக்கு அருகே வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து சம்பவித்த நேரத்தில் பேருந்தில் 20 இலங்கையர்கள் இருந்துள்ளனர்.

இதன்போது பேருந்தின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜன்னல்களை உடைத்து தப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுளளது.

விபத்தில் காலில் காயம் அடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு வேறு எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காயமடைந்த இளைஞருக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என நிமல் பண்டாரா குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய நிறுவனம் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், குழுவில் மீதமுள்ளவர்கள் தங்கள் வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here