இலங்கையர்கள் 46 பேரை நாடுகடத்திய பிரான்ஸ் அரசாங்கம்!

0
239

இந்திய பெருங்கடலில் பிரான்ஸ் நிர்வாகத்தின் கீழ்யுள்ள ரீயூனியன் தீவில் படகு வழியாக தஞ்சமடைந்த 46 இலங்கையர்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் நாடுகடத்தும் பாணியில் பிரான்ஸ் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது.

இதேவேளை, இதுபோன்று படகு வழியாக வருபவர்களுக்கு கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவர்கள் சட்டவிரோதமாக ரீயூனியன் தீவுக்குள் நுழைந்ததாக விமானம் வழியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

பிரான்ஸ் தூதரகத்தின் கூற்றுப்படி, கடந்த டிசம்பர் 24, 2022 அன்று ரீயூனியன் தீவுக்கு சென்றடைந்த இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை கடற்படையின் கூற்றுப்படி, கடந்த டிசம்பர் 02, 2022 அன்று ரீயூனியன் தீவை நோக்கி நீர்கொழும்பில் இருந்து மீன்பிடி படகு வழியாக 46 இலங்கையர்கள் புறப்பட்டிருக்கின்றனர்.

இதில் 43 பேர் ஆண்கள், 02 பேர் பெண்கள், ஒரு 13 வயது குழந்தை இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.“மனித கடத்தல் மற்றும் கடத்தல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு பிரான்ஸ் முன்னுரிமை அளிக்கிறது,” என பிரான்ஸ் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.தற்போது நாடுகடத்தப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம், மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலானோர் ஈழத்தமிழர்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இலங்கையின் தெகிவளையில் உள்ள கடத்தல்காரர்கள் ஏற்பாட்டில் இவர்கள் ரீயூனியன் தீவுக்கு சென்றதாகவும் இதற்காக ஒவ்வொரு இலங்கையரிடமும் 2 லட்சம் இலங்கை ரூபாய் முதல் 4.50 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here