இலங்கையின் பிரதேச செயலாளர்கள் இன்று கொழும்பிற்கு அழைப்பு!

0
82

2026 அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ‘சமூக சக்தி’ கிராமிய அபிவிருத்தி பிரவேசம் குறித்து விளக்கமளிக்க, இலங்கையின் அனைத்து பிரதேச செயலாளர்களும் இன்று (22) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கலந்துரையாடலின் போது, ​​கிராமிய வறுமையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான சமூக சக்தி செயற்திட்டத்தை கீழ் மட்டத்தில் செயல்படுத்துவது குறித்து பிரதேச செயலாளர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட உள்ளது.

மேலும், அரச சேவை மறுசீரமைப்பின் அவசியம், அபிவிருத்தி தொடர்பில் பிரதேச செயலாளர்களின் வகிபாகம், சமூக சக்தி செயற்திட்டத்தில் டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் தளங்களை அறிமுகப்படுத்தல், டிஜிட்டல் பொருளாதார செயற்திட்டத்தில் பிரதேச செயலாளர்களின் வகிபாகம், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல் மற்றும் போதைப்பொருளை ஒழிக்கும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டிற்கு பிரதேச செயலாளர்களின் தீவிர பங்கேற்பை பெற்றுக்கொள்வது குறித்தும் இங்கு கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here