மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழலுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலின் குடிசன தொகை மற்றும் குடிவரவு ஆணைக்குழு (PIBA), இஸ்ரேலில் மீண்டும் கடமையைதொடர திட்டமிட்டு இலங்கைக்குத் திரும்பிய தனிநபர்களுக்கான மறு நுழைவு விசாக்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்துள்ளது.
மறு நுழைவு விசா காலாவதியாகி இருப்பினும்,அசல் மறு நுழைவு விசா வைத்திருப்பவர்கள், ஜூலை 31 ஆம் திகதி வரை இஸ்ரேலுக்கு வேலைக்குத் திரும்பலாம் என வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கான சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டிற்கு தற்காலிகமாகத் திரும்பிய இலங்கைத் தொழிலாளர்கள் திரும்புவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய ஏற்பாடுகள் குறித்து அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.