இலங்கையிலுள்ள 7 மாகாணங்கள் அபாய வலயங்களாக பிரகடனம்!

0
192

நாட்டின் ஏழு மாகாணங்கள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி இந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை, ஹோமாகம, மஹரகம, பிட்டகோட்டே, கடுவெல மற்றும் கொதடுவ பிரதேசங்கள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்லை, பியகம, திவுலப்ட்டிய, ஜா-எல, மற்றும் களனி உள்ளிட்ட 13 சுகாதார மருத்துவ பிரிவு பகுதிகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் பேருவளை மற்றும் களுத்துறை சுகாதார மருத்துவ பிரிவு பகுதிகளும் டெங்கு அதிக அபாய வலயங்களாகும். மேலும் கண்டி மாவட்டத்தில் உள்ள மூன்று சுகாதார மருத்துவ பிரிவு பகுதிகளும் டெங்கு அதிக ஆபத்துள்ள வலயங்களாக உள்ளன.

அதே சமயம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதே எண்ணிக்கை உள்ளது. இலங்கையில் 2022 இல் இதுவரை 63,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அவர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here