இலங்கையில் காணாமல்போனவர்களிற்கான நீதி ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகின்றது என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களை செம்மணியில் உள்ள புதைகுழிகள் வேதனையுடன் நினைவூட்டுகின்றன. நாம் உண்மையிலிருந்து விலகிச் செல்ல முடியாது. காணாமல் போனவர்களுக்கான நீதி ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகிறது