இலங்கையை உலுக்கிய மிகப்பெரிய விபத்து இடம்பெற்று இன்றுடன் 48 வருடங்கள் கடந்துள்ளது.
முழு உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்த இந்த விபத்து இலங்கையின் மஸ்கெலியா பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1974 ம் ஆண்டு டிசம்பர் 4 ம் திகதி மலேசியாவில் இருந்து மக்காவை நோக்கி புனிதயாத்திரை சென்ற யாத்திரிகர்களுடன் பயணித்த விமானம் ஒன்று இலங்கையின் மஸ்கெலியா பிரதேசத்தில் சப்த கன்யா மலைச் சிகரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.குறித்த விபத்து இடம்பெற்று இன்றோடு 48 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று இலங்கையில் நினைவு கூரப்படுகின்றது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 191 பேரும் உயிரிழந்ததோடு, பெரும்பாலானவர்கள் இந்தோனேஷியர்கள்.
உலகில் பதிவான இரண்டாவது பாரிய விமான விபத்து
இது முழு உலகையே திரும்பி பார்க்க வைத்த இரண்டாவது பாரிய விமான விபத்தாக அக் காலத்தில் கணிக்கப்பட்டது.
விமான நிலையத்தின் தூரத்தை விமானிகளால் சரியாக கணிக்க முடியாமல் போனமையால், குறிப்பிட்ட பாதுகாப்பு உயரத்தை விட தாழ்வாக விமானத்தை தரை இறக்கியதால் தரையுடன் மோதுண்டு விமானம் விபத்துக்குள்ளானதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்காக இந்த விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து சற்று துரத்தில் உள்ள நோட்டன் பிரிஜ் பகுதியில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.