இலங்கையில் புதிதாக பரவும் நோய்: எச்சரிக்கை விடுத்த வைத்திய நிபுணர்!

0
180

நாட்டில் ஒருவருக்கு மாத்திரமே லிஸ்டீரியா நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (16-03-2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அதன் ஊடக ஏற்பாட்டாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் சில விடயங்கள் உண்மையல்ல எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, இரண்டு நோயாளர்கள் லிஸ்டீரியா நோயால் உயிரிழந்த தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அந்த நோயாளிகள் லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டவர்களா என்பது தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், இது தொடர்பில் விசேட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

உணவின் மூலம் லிஸ்டீரியா நோய்த்தொற்று ஏற்படுவதுடன், வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிலருக்கு லிஸ்டீரியா நோய் தாக்கிய பிறகு கோமா நிலை உருவாகலாம் என்றும் சுட்டிக்காட்டிய வைத்தியர், இந்த நோயைத் தடுக்க கைகளை கழுவுதல் மற்றும் சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது போதுமானது என்று டாக்டர் நவின் டி சொய்சா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here