இலங்கையில் மீண்டும் கொரோனா: முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு எச்சரிக்கை

0
145

கொவிட் காலத்தில் போன்று மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் J N 1 OMICRON உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு பரவி வருகின்றது.இதன் காரணமாக சளி, காய்ச்சல் போன்ற நிலைமை ஏற்படலாம்.

எனினும் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.J N 1 OMICRON கொவிட் பிறழ்வின் நோய் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், மணமின்மை மற்றும் சுவையின்மை, அதிக வெப்பம், சுவாசக் கோளாறு, உணவு தவிர்ப்பு மற்றும் வாந்தி என்பன காணப்படுகின்றன.

இவ்வாறான நோய் அறிகுறிகள் காணப்படும் போது வைத்தியரை நாடுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.இந்தியாவிலும் J N 1 OMICRON உப பிறழ்வு பரவி வருவதோடு இந்தியாவில் இதுவரை 2660 கோவிட் நோயாளர்கள் கணடறியப்பட்டுள்ளனர்.இந்தியாவில் பரவி வரும் இந்த J N 1 கொவிட் பிறழ்வு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்ட என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபர் ஒருவர் கொவிட் தொற்றால் இன்று உயரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here