இலங்கையில் ரயில் எஞ்சின்களுக்கு தட்டுப்பாடு

0
145

15 எஞ்சின்களும் 31 இயந்திரத் தொகுதிகளும் திருத்தப்பட வேண்டியுள்ளது.
ரயில் எஞ்சின் மற்றும் இயந்திரத் தொகுதிகளுக்கான தட்டுப்பாடு காரணமாக வழமையான நேர அட்டவணைக்கு அமைய ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளாந்த ரயில் சேவைகளுக்காக 74 எஞ்சின்களும் 193 இயந்திரத் தொகுதிகளும் தேவைப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், பயணிப்பதற்கு ஏற்ற வகையில் 58 எஞ்சின்களும் 162 இயந்திரத் தொகுதிகளுமே தற்போது உள்ளதாகவும், 15 எஞ்சின்களும் 31 இயந்திரத் தொகுதிகளும் திருத்தப்பட வேண்டியுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here