இலங்கையில் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிப்பு – புதிய விலை பட்டியல் வெளியீடு

0
152

உள்ளுர் சந்தையில் மோட்டார் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
இணையத்தளங்களில் பதிவாகியுள்ள வாகன விலைகளின் விபரங்களுக்கமைய இரண்டு வருட காலப்பகுதிக்குள் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக நாட்டிற்கு மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த அளவிற்கு விலைகள் உயர்ந்துள்ளன.

வாகனங்களின் விலை உயர்ந்த நிலையில் வாகன விற்பனைகள் பாரியளவு குறைந்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் அதிக அளவில் விற்பனையாகும் பிரபலமாக வாகனங்களின் புதிய விலைகள் சில வெளியாகியுள்ளது.

அதற்கமைய, 2018 – Vitz – 8.1 மில்லியன் ரூபாய், 2018 – alto japan – 5 மில்லியன் ரூபாய், 2015 – alto india – 3 மில்லியன் ரூபாய், 2017 – Axio – 15 மில்லியன் ரூபாய், 2008 – Axio – 6.4 மில்லியன் ரூபாய், 2014 – Premio – 12.5 மில்லியன் ரூபாய், 2019 – Premio – 19 மில்லியன் ரூபாயில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here