இந்திய கிரிக்கெட் அணி விசேட விமானம் மூலம் நேற்று (28) மாலை நாட்டுக்கு வந்தடைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், வீரர்கள் உள்ளிட்ட 47 பேர் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.
ஆவர்கள் இந்தியாவின் மும்பையில் இருந்து நேற்று மாலை 3.15 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் இந்திய அணியை வரவேற்றுள்ளனர்.
ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்றுநராக செயற்படவுள்ள அதேவேளை, அணியின் தலைவராக சிகர் தவான் செயற்படவுள்ளார்.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகள் நடைபெறவுள்ளன.
முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.