2021 ஆம் ஆண்டில் சுமார் 120,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக இலங்கையை விட்டு வெளியேறியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இலங்கையிலிருந்து 30,000 பேர் கத்தாருக்கும், 27,000 பேர் சவுதி அரேபியாவுக்கும், 20,000 பேர் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கும், 1,400 பேர் தென் கொரியாவுக்கும், 1,100 பேர் சிங்கப்பூருக்கும், 1,600 பேர் சைப்ரசுக்கும், 800 பேர் ஜப்பானுக்கும் சென்றுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.