8-வது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. ‘சூப்பர் 12’ சுற்றுக்கு முன்னேறுவதற்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையில் இருந்து காயம் காரணமாக இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்கா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் பினுரா பெர்னாண்டோ உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பினுரா பெர்னாண்டோ, இந்தாண்டு பிப்ரவரி மாதம் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.