இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 97 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் இலங்கை அணி சார்பில் அணியின் தலைவர் குசல் ஜனித் பெரேரா தமது 6 சதத்தை பூர்த்தி செய்து 120 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பந்துவீச்சில் பங்களாதேஸ் அணியின் தஸ்கின் அஹ்மட் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
287 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
ஏற்கனவே, இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்று தொடரை பங்களாதேஷ் அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.