இலங்கை இளம் கிரிக்கட் வீரர்களுடன் விளையாடிய அவுஸ்திரேலிய ஆளுநர்!

0
2

அவுஸ்திரேலிய ஆளுநர் ஜெனரலும், அரசத் தலைவருமான மேதகு சாம் மோஸ்டின் ஏ.சி நேற்று காலை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இலங்கையின் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் உடன், நட்புரீதியான கிரிக்கெட் போட்டிக்காக காலி மாவட்ட வயதுக்குட்பட்ட அணிகளைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களுடன் கவர்னர் ஜெனரல் இணைந்தார்.

அத்துடன் இலங்கை கிரிக்கெட் (SLC) அதிகாரிகளால் அவர் வரவேற்கப்பட்டதோடு இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் பந்துல திசாநாயக்க, புகழ்பெற்ற மைதானத்தின் வரலாறு குறித்த தகவல்களையும் அவருடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான வலுவான விளையாட்டு உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், வளரும் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களையும் மேதகு மோஸ்டின் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here