இலங்கை கல்வி சம்மேளனம் மத்திய வங்கி ஆளுனருக்கு கடிதம்

0
219

தலவாக்கலை பி.கேதீஸ்

கொவிட் 19 கொரோனா தொற்று காரணமாக நாட்டில் நிலவும் தனிமைப் படுத்தல் ஊரடங்கால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையிலான நிவாரணத்தில் ஆசிரியர்கள் உள்வாங்கப்படவில்லை எனவே இச்சலுகை அதிபர்,ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என இலங்கை கல்வி சம்மேளனம் மத்;திய வங்கி ஆளுனருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக இலங்கை கல்வி சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சங்கர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்

ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டாலும் அவர்களின் குடும்பமும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தற்போதைய சூழ்நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் குடும்ப உறுப்பினர்களில் சிலர் வியாபாரத்திலும் சுயதொழில்களிலும் ஈடுப்பட்டவர்களாக உள்ளனர். அதைப்போலவே குறைந்த வேதனத்தை பெறும் ஆசிரியர்களும் தங்களது தொழிலுக்கு மேலதிகமாக ஏதேனும் ஒரு தொழில் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள இச்சூழ்நிலை காரணமாக வருமானத்தை இழந்துள்ள நிலையில் தமது வங்கி கடன்களை செலுத்துவதில் பல்வேறு சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். ஆகவே மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட நிவாரணத்தினை ஆசிரியர்களுக்கும் வழங்குமாறு கேட்டக்கொண்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here