இலங்கை கிரிக்கெட் அணியில் இனப்பாகுபாடு – வினோ நோகராதலிங்கம் சாடல்

0
229

இலங்கை கிரிக்கெட் அணியில் சிறுபான்மை இனத்தவர்கள் ஓரங்கட்டப்படும், புறக்கணிக்கப்படும் நிலைமை இருந்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர், இலங்கை கிரிக்கெட் அணியை முழுமையான ஒரு அணியாக நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கிரிக்கெட் அணியில் இனப்பாகுபாடு இருக்கிறது. நிர்வாக குழப்பம் ஒரு புறம் என்றால், தேர்வுக் குழுவில் உள்ளவர்கள், கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துபவர்கள், அரசியல்வாதிகள் இனவாதத்தின் அடிப்படையில் சிந்திக்கின்றனர்.

இதன் காரணமாக இலங்கையில் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த திறமை வாய்ந்த வீரர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

வடக்கிலிருந்து தேசிய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்ட வியாஸ்காந்த் எல்.பி.எல். போட்டியில் பிரகாசித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு உரிய பயிற்சிகள் அளித்து இடம் வழங்கினால் இலங்கையின் வெற்றிக்கு அவராலும் பங்களிக்க முடியும்.

இவ்வாறாக இனப்பாகுபாடு உள்ளது. அதை நிறுத்த வேண்டும். இது இலங்கை கிரிக்கெட் அணியல்ல. ஒரு சிங்கள அணி என்ற நிலையில் உள்ளது.இந்த நிலை மாற்றப்பட்டு இலங்கை அணி எனச் சொல்லும் வகையில் சகல இனங்களும் அணியில் சேர்க்கப்பட வேண்டும்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here