ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட்டை ( SLC) கடந்த மாதம் 10ஆம் திகதி தற்காலிகமாக தடை செய்திருந்தது.எதிர்வரும் வாரத்தில் இலங்கை கிரிக்கெட் மீதான தடை முற்றாக நீக்கப்படும் என விளையாட்டு அமைச்சின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தடையை நீக்குவதற்கு புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் நேரடியாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிறைவேற்று சபைக்கு புதிய விளையாட்டு அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் சங்கத்துடனும் அமைச்சர் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட்டை ( SLC) கடந்த மாதம் 10ஆம் திகதி தற்காலிகமாக தடை செய்திருந்தது.
இலங்கை கிரிக்கெட்டில் அரசாங்கத்தின் தலையீடு அதிகமாக இருப்பதாக நம்புவதால் இவ்வாறு இலங்கை கிரிக்கெட் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.