இலங்கை சிறுமி அசானிக்கு பதாகை வைத்த ரசிகர்கள் ; மலையக குயிலுக்கு குவியும் ஆதரவு

0
218

‘மலையக குயில்’ அசானிக்கு நயாப்பன தமிழ் வித்தியாலய பழைய மாணவர்களினால் ஆதரவு தெரிவித்து இந்த பதாகை வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிறுமி அசானிக்கு ஆதரவு தெரிவித்து மலையகத்தில் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.சரிகமப பாடல் நிகழ்ச்சியின் நேர்முக தேர்வினை தவர விட்ட இலங்கை சிறுமி அசானி கனகராஜ், தனது விடா முயற்சியால் “சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3” மேடையில் திறமையை வெளிப்படுத்தி தனக்கான அடையாளத்தினை ஏற்படுத்தி கொண்டார்.

இந்த மகிழ்ச்சியை ஊர் மக்கள் பதாகை வைத்து கொண்டாடியுள்ளனர்.

புசல்லாவை, நியூபிகொக் தோட்டத்தில் வசிக்கும், நயாப்பன தமிழ் வித்தியாலய பழைய மாணவர்களினால் ‘மலையக குயில்’ அசானிக்கு ஆதரவு தெரிவித்து இந்த பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறுமி அசானி தொடர்ந்தும் “சரிகமப” மேடையில் பாட வேண்டும் என்ற கோரிக்கை இலங்கையில் எழுந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here