இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்த மன்னார் மாணவன்..!

0
127

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் செல்வன் கிதுஷன் 17வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணியில் இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

பல வீரர்களை தேசிய அணிக்கு மன்னாரிலிருந்து அனுப்பிய புனித சவேரியார் தேசிய பாடசாலை, மீண்டும் ஒரு வீரரை 17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு அனுப்பியுள்ளது.

மன்னார் புனித.சவேரியார் ஆண்கள் கல்லூரியில் இருந்து பல மாணவர்கள் இலங்கை தேசிய மட்ட உதைப்பந்தாட்ட குழுவினுள் இணைக்கப்பட்டுள்ள போதும் இப் பாடசாலையின் 7 வது மாணவனாக செல்வன் கிதுஷன் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தேசிய உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்த குறித்த மாணவனுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here