தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் “மலையக இலக்கியம் 200” விழா, தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன், அயல் நாட்டு தமிழ் கல்வித்துறை தலைவர் இரா.குறிஞ்சி வேந்தன் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் மற்றும் எழுத்தாளர் திரு.சி மகேந்திரன் ஆகியோர் பங்கேற்று விழாவை ஆரம்பித்து வைத்தனர்.
தமிழ் பல்கலைக்கழகத்தால் இந்தியாவில் வெளியிடப்பட்ட “indo -ceylon pact” என்ற புத்தகத்தின் முதல் பிரதியை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானிடம் கையளித்தார்.