பிலிப்பைன்ஸில் உள்ள Cotabato நகரில் வைத்து இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இன்று வியாழக்கிழமை நண்பகல் 2 மணியளவில் இனம்தெரியாத நபரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்ட வர்த்தகர் பரங்காய் செம்பாவில் டத்து ஒடின் சின்சுவாட் நகரமான மகுயிண்டனாவோவில் ( Datu Odin Sinsuat, Maguindanao ) வசித்து வந்த மொஹமட் ரிஃபார்ட் மொஹமட் சித்தீக் (வயது 46 ) என அடையாளம் காணப்படடுள்ளார்.
வெள்ளை நிற வானில் இருந்து கோடாபாடோ நகரத்தில் இறங்கிக் கொண்டிருந்தபோது சித்தீக் தலை மற்றும் மார்பில் மூன்று முறை சுடப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெற்று தோட்டாக்களின் அடிப்படையில் , கலிபர் 45 கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலிப்பைன்ஸ் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.