ராகம ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபர் இலஞ்சம் பெற முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ராகம மத்துமாகல பிரதேசத்தில் 2025 ஆம் ஆண்டுக்கு சிறுமியொருவர் முதலாம் தரத்திற்கு அனுமதிப்பதற்காக ஒருவரிடம் இருந்து 150,000 ரூபாயை இலஞ்சமாக வாங்கும் போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.